யாழில் பரபரப்பு! மதிலேறி வந்து இரண்டரை வயதுப் பிள்ளை கடத்தல்!!

யாழ். அல்வாய் நாவலடிப் பகுதியில் ஆர்கலி என்ற இரண்டரை வயதுக் பெண் பிள்ளை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாத நபர்கள் மதில் ஏறி உள் நுழைந்து வீட்டு விறாந்தை மின்குமிழை தணித்து விட்டு உணவருந்திக் கொண்டிருந்த பிள்ளையைக் கடத்திச் சென்றுள்ளனர்.

இதேவேளை பிள்ளையின் குடும்பத்தாருக்கு நேற்றைய தினம் அநாமதேயத் தொலைபேசி அழைப்பொன்றில் உங்களுடைய குழந்தை கடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த பிள்ளையும தாயும் தந்தையும் பிரிந்து வாழ்ந்துவருவதாகவும், பிள்ளை தாயுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில் தந்தை தரப்பினர் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் தாயார் தெரிவித்திருப்பதாக தெரியவருகிறது.
Previous Post Next Post