யாழில் அதிக வேகத்தினால் வீதியில் துடிதுடிக்க இறந்த இரு இளைஞர்கள்! (வீடியோ)

யாழ்.தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமம் பகுதியில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

இயக்கச்சி கோவில் வயல் பகுதியைச் சேர்ந்த கஜீவன் (வயது 18), சாந்தன் (வயது 24) என்பவர்களே உயிரிழந்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு எடுப்பதற்காக சென்றபோதே அவர்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம் நோக்கிய திசையில் பயணித்த அவர்கள் தமக்கு முன்பாக சென்ற டிப்பர் வாகனத்தை கடந்து செல்ல முற்பட்டபோது எதிரே வந்த மற்றொரு டிப்பர் வாகனத்துடன் மோதி உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் அதி வேகமாக பயணித்ததாகவும் தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Previous Post Next Post