புண்ணாலைகட்டுவன் ஆயக்கடவை சித்தி விநாயகர் ஆலய குரு மீது நேற்று மதியம் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.இச் சம்பவத்தில் ஆலய குருவான சுந்தரராஜா குருக்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புனர்நிர்மான பாலஸ்தானம் செய்யப்பட்டு இன்றையதினம்(24) திருவிழா இடம்பெற இருந்த நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளாக பூஜை வழிபாடுகள் குறைவடைந்து இருந்தது. இவ் ஆலய பூசகருக்கும்- பரிபாலன சபையினருக்கும் இடையில் ஆலயம் தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் தீர்ப்பு ஆலய குருவிற்கு சார்பாக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.
இன்று(24) திருவிழா வெகு விமர்சியாக இடம்பெறவிருந்த நிலையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.