“முடிந்தால் என்னைப் பிடியுங்கள்” யாழில் சிறுமியைக் கடத்திய தந்தை பொலிஸாருக்குச் சவால்!

சினிமா பாணியில் நேற்று இரவு வடமராட்சியில் கடத்தப்பட்ட 2 வயது சிறுமியின் தந்தை முடிந்தால் தனது இருப்பிடத்தை கணடறிந்து பிடிக்குமாறு பருத்தித்துறைப் பொலிஸாருக்குச் சவால் விடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் நேற்று (ஜூன்-3) இரவு உணவு அருந்திக்கொண்டிருந்த இரண்டு வயதுடைய ஆர்கலி என்ற சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக சிறுமியின் தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்து.

குறித்த சிறுமியின் தாயும் தந்தையும் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சிறுமியின் கடத்தலுக்கு தந்தையே காரணமாக இருக்கலாம் என தாயாரால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவரது தொலைபேசி உரையாடல் அதனை உறுதி செய்துள்ளது.

சிறுமியை கடத்திய சிறுமியின் தந்தையாரால் பருத்தித்துறைப் பொலிஸாருக்குத் தொலைபேசி மூலம் அழைப்பெடுத்து, முடிந்தால் தனது இருப்பிடத்தை கண்டறிந்து தன்னை பிடிக்குமாறு சவால் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிறுமியின் தாயாருக்கும் தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டு குழந்தை வேண்டுமானால் உடமைகளை எடுத்துக் கொண்டு சாவகச்சேரிக்கு வருமாறு கூறியுள்ளதாகவும் மேலும் அறிய முடிகிறது.
Previous Post Next Post