ரயில் மேல் ஏறி நடந்து சென்ற நபரால் பிரான்ஸில் பதற்றம்! (வீடியோ)

பொதுமுடக்க நீக்கத்துக்கு பின்னராக தொடருந்து சேவைகள் மெல்லமெல்ல வழமைக்கு திரும்பி வரும் நிலையில், தலைநகர் பரிசினை ஊடறுக்கு செல்லும் RER B தொடருந்து சேவையில் நேற்று ஏற்பட்ட விபரீதமான விபத்து அதன் சேவையினை முற்றாக முடக்கியுள்ளது.

la Plaine Stade de France தொடருந்து நிலையத்தில் RER B தொடருந்துக்கு மேல் ஏறிய ஒருவர் அதன்மேல் நடக்கத் தொடங்கியுள்ளார். இந்த நபரின் செயல் பயணிகளை மட்டுமல்ல, தொடருந்து சேவையினருக்கும் பதற்றத்தினை ஏற்படுத்திய நிலையில் மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

மாலை 1650ல் இருந்து 1845 வழித்தடத்தின் மின்சாரம் முற்றுமுழுதாக துண்டிக்கப்பட்டிருந்தது. குறித்த நபரின் செயல் விபத்தா அல்லது தற்கொலை முயற்சியா என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளதோடு, குறித்த நபர் கடுமையான பாதிப்புக்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post