
அங்கப்பிரதஷ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று செவ்வாய்கிழமை நடந்த சிறப்பு அமர்வில் பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்படி தீர்மானத்மை பதில் முதல்வர் அறிவித்தார்.
நல்லூர் திருவிழாவில் 500இற்கும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக செய்திகள் தெரிவித்தன.
இருப்பினும் பிரதமரின் அறிவிப்பு தொடர்பில் பொது சுகாதார பரிசோதர்களுக்கு உத்தியோகபூர்வமாகக் கிடைக்கவில்லை. இதனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன்படி திருவிழாவில் 300 பக்தர்களையே அனுமதிக்க முடியும்.
மேலும் அன்னதானம், வியாபார நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றவற்றினையும் இம்முறை தடை செய்யப்படவுள்ளதாகவும் பதில் முதல்வர் மேலும் தெரிவித்தார்.