
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இன்று அதிகாலை 6 மணிக்கு முருகப்பெருமான் தேரில் ஏறி அருள் பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடாற்றியிருந்தனர். இதன் போது அங்கு வழிபாட்டில் பங்குகொண்ட பெண் பக்தர்களில் ஆறு சங்கிலிகளும் தாலிக்கொடி ஒன்றும் அறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இதேவேளை திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரால் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

