
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டமை கடந்த 5-ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது. தற்போது அவா் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தபோதும் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவா் அனுமதிக்கப்பட்டுள்ள MGM மருத்துவமனை பிரதிப் பணிப்பாளா் டாக்டர் அனுராதா பாஸ்கரன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சிறப்பு மருத்துவக்குழு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறது. 13 ஆம் திகதி அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். செயற்கை சுவாசக் கருவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவரது உடல்நிலை குறித்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றுள்ளது.