ஜேர்மனியில் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 94 தமிழர்களுக்குக் கொரோனாத் தொற்று!

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஜேர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் Bielefeld என்ற நகரில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற பூம்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட இலங்கைத் தமிழர்கள் 94 பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது அந்நாட்டு சுகாதாரப் பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தற்போது தனியமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உடனடியாக உட்படுத்துமாறு சுகாதாரப் பிரிவு அந்நகர வானொலிகள் மூலம் அறிவித்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post