முற்றாக முடங்கியது யாழ்ப்பாணம்! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் அழைப்பில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் முழுக் கடையடைப்பு அமைய யாழ்ப்பாணம் முடங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரம் முற்றாக முடங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் முடங்கியுள்ளன.

அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் முழுக் கடையடைப்புக்கு 10 தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து
அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த அழைப்பிற்கு தமிழ் பேசும் மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர்.

Previous Post Next Post