யாழ்.பல்கலையில் பதற்றம்! இராணுவம், பொலிஸ் குவிப்பு!! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசின் அடக்குமுறைக்கு எதிராக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கருப்பு உடை அணிந்து போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் மாணவர்கள் சிலர் கருப்பு உடை அணிந்திருந்தனர்.

அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பிரதான வாயிலில் நின்றிருந்தனர்.

இதனை அறிந்த கோப்பாய் – யாழ்ப்பாணம் பொலிஸார் பல்கலைக்கழக சூழலில் பொலிஸாரை கடமைக்கு அமர்த்தியிருந்தனர். இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் கறுப்பு உடை அணிந்து வீதியில் நின்ற மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு செல்லுமாறு கேட்டனர். எனினும் மாணவர்கள் தமது உரிமையை வலியுறுத்திய நிலையில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

மாணவர்களை அந்த இடத்தில் இருந்து அகழுமாறு பொலிஸார் கோரினர். எனினும் பொலிஸாரை அங்கிருந்து செல்லுமாறு மாணவர்கள் கேட்டுள்ளனர்.







Previous Post Next Post