
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
'இரண்டாம் கட்ட கொரோனா அலை' தற்போது பரிசில் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பரிசில் தற்போது 399 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 95 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 'உள்ளிருப்பு' சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட முதல் நாள் (மார்ச் 18 ஆம் திகதி) பதிவான அதே அளவு தொற்று தற்போது மீண்டு பதிவாகியுள்ளது.
மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 1,872 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பரிசில் சாவடைந்துள்ளனர்.