பிரான்ஸில் குளிர் காலத்தில் தொற்று அதிகரிக்கும்! வைத்தியத்துறை எச்சரிக்கை!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்து வரும் நிலையில், குளிர்காலத்தில் கொரோனாத் தொற்றின் வேகம் அதிகரிக்கும் என வைத்தியத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அத்துடன், வரும் நான்கு, ஐந்து மாதங்கள் மிகவும் அதிகரித்த தொற்று மற்றும் உயிரிழப்புக்களைக் கொண்ட மாதங்களாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒக்டோபர் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பதிவான கொரோனா சாவுகள் மற்றும் புதிய தொற்றுக்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 12,148 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. (ஒக்டோபர் 1 ஆம் திகதி 13,970 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.) அதேவேளை தொற்று வீதம் கடந்த 48 மணிநேரங்கள் கழித்து 7.6% வீதத்தில் இருந்து 7.7%. வீதமாக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 48 பேர் புதிதாக சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் மார்ச் 1 ஆம் திகதியில் இருந்து பதிவான சாவு எண்ணிக்கை 32,155 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 7 நாட்களில் 4,058 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 835 பேர் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post