யாழ்.பல்கலையில் மோதல்! மாணவர் வைத்தியசாலையில் அனுமதி!!


யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலின் போது, துணைவேந்தர் தாக்கியதாக மாணவர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையே நேற்றிரவு மோதல் இடம்பெற்றுள்ளது.

அந்த மோதலின் போது, சம்பவ இடத்திற்குச் சென்ற யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் விரிவுரையாளர்கள் மோதலைக் கட்டுப்படுத்த சென்ற போது, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, துணைவேந்தர் நிலத்தில் விழுந்துவிட்டார். அப்போது, விரிவுரையாளர் ஒருவர் தம்மை தாக்கியதாக மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், துணைவேந்தர் மற்றும் விரிவுரையாளரினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட வசந் என்ற மாணவன் நேற்றிரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் துணைவேந்தர் தன்னை தாக்கியதாக பொலிஸாரின் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக, சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை நியமித்து இன்று மாலை 3 மணிக்கு விசாரணை செய்யப்படுமென யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post