யாழ். பருத்தித்துறையில் 9 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யன்னல் கதவின் பிணைச்சலில் பாடசாலை கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னலில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று திடீர் இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இன்று (நவ.30) திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை, புலோலி- சாரையடியைச் சேர்ந்த ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாயாரும் தமையனும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த மாணவி, தமையனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில் காணப்பட்ட யன்னல் பிணைச்சலில் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுள்ளார்.சுருக்கு இறுகியதால் மாணவி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவராஜா விசாரணைகளை முன்னெடுத்தார்.

உடற்கூற்றுப் பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி சுதேவா முன்னெடுத்தார்.

கழுத்தில் பாடசாலை பட்டி இறுகிக் கொண்டதால் சிறுமி உயிரிழந்தார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post