பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் திடீர் மரணம்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கையைச் சேர்ந்த பிக்பாஸ் பிரபலம் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்றிரவு உயிரிழந்துள்ளார் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், இலங்கையிலிருந்து சென்ற லொஸ்லியா பங்கேற்று மிகவும் பிரபலமானர்.

திருகோணமலையைச் சேர்ந்த இவரின் தந்தை மரியநேசன் கனடாவில் வசித்து வந்தார்.

கனடாவில் உறவினர் வீடு ஒன்றுக்குச் சென்றிருந்த நிலையில் அங்கு கடந்த இரவு உறங்கச் சென்றிருக்கின்றார். இன்று காலை அவரை எழுப்ப முற்பட்டபோது அவர் உயிரிழந்து காணப்பட்டதாக தெரியவருகிறது.

தற்போது லொஸ்லியா இந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், அவரின் தந்தையான மரியநேசன் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு உயிரிழந்துவிட்டார்.

அவருடைய மரணம் மாரடைப்பினாலேயே நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post