
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான ஜெ.நிரோசன் என்பவரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார்.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய குடும்பப் பெண் முள்ளியவளைப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குடும்பத் தலைவரின் தலையில் இரு வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன என்றும், இது தொடர்பான மேலதிக விபரங்களை விசாரணையின் பின்னரே தெரிவிக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது உடல் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் முள்ளியவளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.