பிரான்ஸ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி மக்ரோன்!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து போராட வேண்டும் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மக்ரோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது ருவிட்டர் பக்கத்திலேயே அதிபர் இக் வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மக்களும் அரசாங்கமும் இணைந்து எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தளர்வடையக் கூடாது என்றும் கட்டுப்பாடுகளை நாங்கள் மீறக் கூடாது என்றும் இனிவரும் நாட்கள் தான் கொரோனா வைரஸின் முடிவைத் தீர்மானிக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதைவிட நாட்டு மக்கள் கொரோனா வைரஸின் எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இதில் ஐந்து நடவடிக்கைகள் முக்கியமானவை. அதாவது, முகக் கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவிக் கொள்வது, சமூக இடைவெளியைப் போணுவது, மூடப்பட்ட இடங்களின் கதவுகளைத் திறந்து விட்டு காற்றோட்டமாக விடுவது, இணையம் ஊடாக செயலியை தரவிறக்கம் செய்து, அனைத்தையும் கடைப்பிடித்து கொரோனா வைரஸை இல்லாது ஒழிப்பதற்கு அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அவர்கள் நாட்டு மக்களை டுவிட்டர் ஊடாகக் கேட்டுள்ளார்.

இதேவேளை உள்ளிருப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 15 நாட்களின் பின்பு கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில மாகாணங்களைத் தவிர்த்து குறிப்பாக இல் து பிரான்ஸில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் மாகாணங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post