பிரான்ஸில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் மக்கள்! மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கொரோனாத் தொற்றுக் காலத்தில் பிரான்ஸ் நாட்டில் பெருந்தொகையான மக்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி வருவதாக வைத்திய கலாநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதவது உள்ளிருப்பு நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற நிலை போன்றவற்றினால் மன அழுத்தங்கள் கூடுதலாக ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

செப்ரெம்பர் மாதத்தில் 10 வீதமாக இருந்த மன அழுத்தம் கொண்ட மக்களின் தொகை தற்போது நவம்பர் மாத முதல் வாரத்தில் 21 வீதமாக அதிகரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத் தொகையானது ஆறு கிழமைகளில் இரு மடங்காக அதிகரித்திருப்பது ஆபத்தான சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

வேலையிழப்பு, வேலையைப் பற்றிய சிந்தனை போன்றனவும் இதற்கான காரணங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது பற்றியும் சிறிய வியாபார நிலையங்களைத் திறப்பது பற்றியும் கருத்துத் தெரிவித்த வைத்திய கலாநிதி, முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியும் பின்பற்றப்படுமானால் இவற்றைத் திறக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இதேநேரம் நத்தார் பண்டிகையைக் குடும்பங்களுடன் சேர்ந்து கொண்டாடலாமா என்ற கேள்விக்குப் பதிலளித்த மருத்துவர், ஆறிலிருந்து பத்துப் பேருக்கு மேல் ஒன்றுகூடாமல் இருப்பது சிறந்தது என்றும் குடும்ப ரீதியாகச் சந்தித்துக் கொண்டாலும் முகக் கவசம் அணிந்திருப்பது நன்று என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உள்ளிருப்பைச் சிறிது சிறிதாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உள்ளிருப்பிலிருந்து ஊரடங்குக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post