பிரான்சுக்கு எதிரான கருத்துக்கள்! துருக்கிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸ் நாட்டுக்கும், பிரான்ஸ் நாட்டின் அதிபருக்கும் எதிரான கருத்துக்களை உலகளாவிய ரீதியில் பரப்பி வரும் துருக்கி நாட்டுக்கு எதிராகப் பொருளாதாரத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கவுள்ளது.

கடுமையான இஸ்லாமியக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வரும் நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் துருக்கி நாட்டுக்கு பொருளாதாரத் தடையை விதிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதம் என்பது ஐரோப்பாவின் வாசலில் வந்திருப்பதனால் துருக்கி மீது தடைகள் விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் துருக்கிக்குமிடையில் தற்போது பனிப்போர் ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது. மத்திய தரைக் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுக் கசிவுகளினாலேயே இப் பனிப்போர் ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இதைவிட ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், இஸ்லாமியத் தூதரின் உருவப் படங்களை வரைவதற்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்ட கருத்து துருக்கி அரசினால் நிராகரிக்கப்பட்டதுடன், அங்கு பிரஞ்சுப் பொருட்கள் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளின் அனுமதியுடன் துருக்கிக்கு எதிராகத் தடைகளை விதிக்க முயன்று வருகின்றது.
Previous Post Next Post