யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி மாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் (வயது 23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் கோண்டாவில் கிழக்கு, வன்னியர்சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வி கற்று வந்திருக்கின்றார். அந்த வீட்டிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை இடம்பெற்றுவருகின்றது.

குறித்த மாணவன் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய சம்வங்கள் எதுவும் நடந்திருக்கவில்லை என்றும் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மருத்துவ மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றனின் மரணம் தொடர்பில் பரிசோதித்த சட்டவைத்திய அதிகாரி மயூரன், கழுத்து இறுகி மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் மாணவனின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post