02ஆம் இணைப்பு:கொரோனாச் சந்தேகம்! சாவகச்சேரி வைத்தியசாலையில் நோயாளி உயிரிழந்ததால் பரபரப்பு!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இரண்டாம் இணைப்பு:

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு கோரோனா தொற்று உள்ளதா? என்று கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதனால் சாவகச்சேரி வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. ஊழியர் அலுவலகத்துக்குள் செல்ல மருத்துவ அத்தியட்சகரால் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பளையைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். அவர் காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிசிஆர் பரிசோதனை அறிக்கை எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு:

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவக்சேரி வைத்தியசாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகின்றதாக தெரியவருகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

காய்ச்சல் அறிகுறியுடன் காணப்பட்ட வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த ஒருவர் சாதாரண விடுதியில் கடந்த நான்கு நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இன்று அவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

அவர் தொடர்பில் விசாரித்தபோது அவருடைய வாகனச் சாரதி கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இதனால் இன்று உயிரிழந்தவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறாரோ என்ற சந்தேகம் வைத்தியசாலை மட்டத்தில் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

சாதாரண விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளமையால் அவருக்கு தொற்று உறுதியானால் பாரிய ஆபத்து நிலை ஏற்படும் என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது.


Previous Post Next Post