நல்லூர்க் கந்தனின் சூரன் போர்! ஆலயத்தின் முன் மண்டபத்தில் இடம்பெற்றது!! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூரன் போர் நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கோவிட் – 19 நோய்த் தொற்று கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சூரன் போர் உற்சவம் இடம்பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிய கந்த ஷட்டி திருவிழா இன்று 6ஆம் நாள் சூரன் போருடன் நிறைவடைந்தது.

நல்லூர் ஆலயத்தில் பக்தர்கள் வெளி வீதியில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்கள் இடையே சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் என்ற நடைமுறைகள் இறுக்கமாகப் பின்பற்றப்பட்டன.

சிவாச்சாரியர்கள் சண்முகப் பெருமானை சுமந்து வர சூரன் போர் முன் மண்டபத்தில் இடம்பெற்றது.

Previous Post Next Post