யாழ்.அனலைதீவில் பசு மாட்டை இறைச்சிக்காக வெட்டிய கொடூரம்! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அனலைதீவில் சட்டத்துக்குப் புறம்பாக பசு மாடு ஒன்றை இறைச்சிக்கு கொலை செய்த நிலையில் கும்பல் ஒன்று தப்பித்துள்ளது.

அண்மைக் காலமாக பசு வதை அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சம்பவம் நேற்றுப் புதன்கிழமை அனலைதீவு 5ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.

பசு மாட்டை இறைச்சிக்காக கொலை செய்த நிலையில் அந்த வழியால் சென்றவர்கள் கண்ணுற்றதால் கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

அங்கு கட்டாக்காலிகளாக பசு மாடுகள் காணப்படுவதால் அவை திருடப்பட்டு இறைச்சியாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
Previous Post Next Post