சாவகச்சேரியில் விபத்து! சிறுவன் உள்ளிட்ட இருவர் சாவு! மற்றொரு சிறுவன் ஆபத்தான நிலையில்!!!(வீடியோ)எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தென்மராட்சி நுணாவில் பகுதியில் வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் பெண் ஒருவரும் அவரது சகோதரியின் பிள்ளை ஒருவருமான இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மற்றொரு சிறுவன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவரான சாரதி காயங்களின்றித் தப்பித்தார்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றது என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

நுணாவில் சந்திக்கு அண்மையில் உள்ள ரயர் கடைக்கு முன்பாக ரயர் திருத்த வேலைக்காக எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்று வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து ஏ-9 கண்டி வீதியில் பயணித்த கார் ஒன்று அந்த வாகனத்தின் பின் பகுதியில் மோதியதில் 5 படுகாயமடைந்தனர். சாரதி காயமின்றி தப்பித்தார்.

அவர்கள் ஐந்து பேரும் உடனடியாகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் பெண் மற்றும் 6 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

“யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த திருமதி ஆன் டேரோளினி (வயது -30), அவரது சகோதரியின் மகன் யோகதாஸ் மகிழன் (வயது -6) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஆன் மக்கிலியோட் (வயது – 6) என்ற சிறுவன் தலையில் படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றார்.

லேபோனியா என்ற பெண்ணும் கரோலின் (வயது-35) என்ற பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்” என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post