வீதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் வேலணை பிரதேச சபை உத்தியோகத்தர்கள்! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் அண்மையில் பெய்த கடும் மழை மற்றும் புயல் காரணமாக வீதிகள் எங்கும் கழிவுகள் தேங்கியுள்ளன.

இந் நிலையில் வேலணை பிரதேச சபை தனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு வீதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி வருகின்றது.

நேற்றும் இன்றும் மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டிப் பகுதிகளில் உள்ள வீதிகளில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இச் சிரமதான நிகழ்வில் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை இச் சிரமதானப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் பிரதேச சபையினர் அறிவித்துள்ளனர். 
Previous Post Next Post