யாழில் கொட்டித் தீர்க்கும் மழை! மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடக்கம்!! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் இடைவிடாத கொட்டித் தீர்க்கும் கனமழையால் தாழ்நிலப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் குடியிருப்புகள் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகரில் பல வீதிகளில் வெள்ளம் தேங்கிக் காணப்படுகிறது. பல வீதிகளில் வெள்ளம் பாய்கிறது.

புரவி புயல் கடந்த புதன்கிழமை இரவு வடக்கு மாகாணத்தை கடந்த சென்ற நிலையில் கடந்த 4 நாள்களாக மழை பொழிகிறது. நேற்றுக் காலை யாழ்ப்பாணத்தில் தெளிவான வானிலை காணப்பட்ட போதும் பிற்பகல் மழை பொழிய ஆரம்பித்தது.

நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பொழிந்தது. இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுகிறது.


Previous Post Next Post