நீரில் மூழ்கியது நல்லூர் ஆலய வீதி! மூடப்பட்டது யாழ்.ஸ்ரான்லி வீதி!! (படங்கள்)எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் குடியிருப்புக்களுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. நல்லூர் ஆலயப் பகுதி முற்று முழுதாக நீரில் மூழ்கியுள்ளது.

இதேவேளை மழை வெள்ளம் காரணமாக யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியூடான போக்குவரத்து தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புரவி புயல் கடந்த புதன்கிழமை இரவு வடக்கு மாகாணத்தை கடந்த சென்ற நிலையில் கடந்த 4 நாள்களாக மழை பொழிகிறது. நேற்றுக் காலை யாழ்ப்பாணத்தில் தெளிவான வானிலை காணப்பட்ட போதும் பிற்பகல் மழை பொழிய ஆரம்பித்தது.

நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பொழிந்தது. இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுகிறது.

Previous Post Next Post