
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
குறுகிய காலத்தில் சில சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் இந்த நடைமுறை நீண்ட காலத்திற்கு ஒரு முக்கியமான கொள்கையாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்திய பொருளாதாரக் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய வங்கி வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
“இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நாட்டின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சூழல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கார்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருள்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு கொடுப்பனவு நிலுவை இன்னும் சரிசெய்யப்படவில்லை” என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
அனைத்து பங்கு விலைச் சுட்டெண் கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் ஒரே நாளில் இன்று மிக உயர்ந்தது.
அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்றைய நாள் முடிவில் 387.19 புள்ளிகளால் அதிகரித்து 7 ஆயிரத்து 985 புள்ளிகளாக உள்ளது.