தரம் 5 புலமைப் பரிசில், க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் அறிவிப்பு!


ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரணதரப் பரீட்சை திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 30ஆம் திகதிவரை இடம்பெறுகிறது.

க.பொ. த. சாதாரணதரப் பரீட்சை 2022ஆம் ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் இடம்பெறவுள்ளது.

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இல்லாததால் பாடத்திட்டங்கள் முறையாக முடிக்கப்படவில்லை என்பதே பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post