நேற்று வியாழக்கிழமை பிரான்சில் வரலாறு காணாத எண்ணிக்கையில் பெரும் தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரங்களில் 84,999 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தொற்று 7.3% வீதமாக உயர்வட்டைந்துள்ளது. இதுவரை மொத்தமாக 4,939,258 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 7 நாட்களில் 13.708 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.
அதேவேளை இந்த 24 மணிநேரத்தில் 345 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 98.065 பேராக அதிகரித்துள்ளது.
தற்போது 30.555 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 5.705 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரான்சில் 10 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக நேற்றைய நாளில் பிரதமர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.