யாழில் பொலிஸாருக்கு முன்னே நடந்த விநோத திருட்டு!


யாழ்ப்பாணத்தில் வங்கி அட்டையைத் திருடி, அதன் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்த திருட்டு ஆசாமி தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் தகவல் வழங்கியுள்ளார்.

தனது முகநூல் ஊடாக இத் தகவலைப் பகிர்ந்து கொண்ட பாதிக்கப்பட்டவர், இவ் ஆசாமி தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் தெரிவித்துள்ளார். 

அவரின் முகநூர் பதிவில்,  

யாழ். பஸ்நிலையத்திற்கு முன்னால் பொலிஸாரின் சோதனைச் சாவடியில் பொலிஸார் மறித்து சாரதி அனுமதிப் பத்திரத்தை  பார்த்த போது இனொருவரையும் மறித்து பார்த்தார்கள். அப்போது அவர் தனது பணப் பையினை கிழே தவறவிட பொருட்கள் சிதறியது.

நானும் எனது நண்பி மற்றும் பொலிஸ் மூவரும் கீழே விழுந்த பொருட்களை எடுத்து கொடுத்த வேளையில் அவர் எனது பணப் பையினை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

அதன் பின்னர் வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள மருந்தகமொன்றில் 4 சஸ்ரேஜன் மா கொள்வனவு செய்துள்ளார். சிட்டை போடும் நேரத்தில் card block பண்ணிவிட்டேன். purchase alert வந்ததுமே அந்த மருந்தகத்துக்கு சென்றேன்.

அப்போது தனது card ல் cash இருக்கு ஏன் வேலை செய்யவில்லை என பேசிட்டு போகிறார். இதே நபர் நேற்றும் இதே போல் மருந்தகத்துக்கு card கொண்டு வந்து வேலை செய்யவில்லையாம்.

தலைக்கவசம், முகக்கவசம் அணிந்திருந்ததால் முகம் தெரியவில்லை. மோட்டார் சைக்கிளை தூர விட்டு நடந்து வந்ததால் இலக்கமும் தெ‌ரியவில்லை என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார். 
Previous Post Next Post