புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் இன்று இரவு முதல் முடக்கம்!


முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் இன்று இரவு 11.00 மணி முதல் மறு அறிவிப்பு வரை தனிமைப்படுத்துவதாக இராணுவத் தளபதி, சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல நூற்றுக் கணக்கான கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் இந்த முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை கடைப்பிடிக்க நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில் இந்த முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post