நாடு முழுவதும் முடக்கம்! யாழ்.கோவிலில் அன்னதானம் வழங்க ஏற்பாடு!! பங்குபற்றியவர்கள் தனிமைப்படுத்தலில்!!!


யாழ்.மல்லாகம் பகுதியில் பயணதடை மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி கோவிலில் அன்னதானம் வழங்க ஒழுங்கு செய்த 25ற்கும் அதிகமானவர்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை குறித்த கோவிலில் அன்னதானம் வழங்குவதற்கான சிறப்பு பூஜை ஏற்பாடாகியிருந்து.

தெல்லிப்பழை பொலிசார் மற்றும் தெல்லிப்பழை சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவிக்கு இது தொடர்பாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்து, இன்று காலை பொதுச்சுகாதர பரிசோதகர் மற்றும் பொலிசார் அங்குசென்றுள்ளனர்.

அதன்போது கோவிலில் வழிபாடுகள் இடம்பெற்று அன்னதானம் வழங்கவும் ஏற்பாடாகியிருத்த நிலையில், உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டதுடன், கோவில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 25 க்கும் அதிகமானோர் குடும்பத்துடன்தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post