புதுக்குடியிருப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை குத்திக்கொலை – நண்பர் தலைமறைவு


முல்லைத்தீவில் 2 பிள்ளைகளின் தந்தை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரைக் கொலை செய்திருக்கலாம் என நம்பப்படும் அவரது நண்பர் தலைமறைவாகிய நிலையில் பொலிஸார் தேடி வருகிறனர்.

இந்தக் கொலைச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் புதுக்குடியிருப்பு சுதந்திரம் கொலணியைச் சேர்ந்த குணராசா நிதர்சன் (வயது -25) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.

அவரும் நண்பரும் கடற்தொழிலுக்காகச் சென்றிருந்த நிலையில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவரின் சடலம் வீட்டிலிருந்து சில நூறு மீற்றர்கள் தூரத்தில் மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டவரின் நண்பர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தேடி வருகின்றனர்.

சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலத்திலிருந்து பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்ட நிலையில் அதன் முடிவு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post