கொரோனாவின் கொடூரம்: ஐந்தாவது கர்ப்பிணித் தாயும் உயிரிழப்பு!


இலங்கையில் கொரோனா 3வது அலை தொற்று பரவல் மிகத் தீவிரமான தாக்கத்தினை செலுத்தி வரும் நிலையில் மேலும் ஒரு கர்ப்பிணித் தாயின் உயிரையும் பறித்துள்ளது.

கொரோனாத் தொற்று பாதிப்பு காரணமாக மேலும்மொரு கர்ப்பிணித் தாய் உயிரிழந்திருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்தார்.

இன்று நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா 3வது அலை தொற்று பரவல் ஆரம்பித்த பிற்பாடு இவ்வாறு உயிரிழக்கும் ஐந்தாவது கர்ப்பிணித் தாய் இவர் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post