
பயணத்தடையை மீறி நினைவுகூரப்பட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி எச்சரித்துள்ளார்.
நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாநகர சபையினரின் ஏற்பாட்டில் பொது நூலகத்தில் இடம்பெற இருந்த்து.
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இன்று காலை 9.30 மணியளவில் சுடரேற்றி நினைவு நிகழ்வை நடத்தவிருந்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் பொது நூலகத்திற்குள் உள் நுழைய விடாது முயற்சிகளை எடுத்தனர்.


