நல்லூர் பிரதேச மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்கின்றது! (படங்கள்)
byYarloli
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நடைமுறையில் உள்ள பயணத் தடை உத்தரவு காரணமாக நாளாந்த வருமானம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெய்வேந்திரம் கிரிதரன் தலைமையில், 30 குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் பெறுமதியான உணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.