பிட்டின் சுவையில் மயங்கிய அமெரிக்கத் தூதுவர்! (படங்கள்)


கடந்த பல மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அதிகாரி ஒருவர் பிட்டு தொடர்பில் கதைத்து சர்ச்சையில் சிக்கினார்.

சர்ச்சையில் சிக்கியது என்னவோ அதிகாரிதான் ஆனால் அன்றில் இருந்து பிட்டுக்கு உலகளாவிய ரீதியில் மவுசு அதிகரித்தது.

பிட்டு பாடல், பிட்டு கதை, பிட்டு செய்முறை என இணையத்தில் ஒய்யாரமாக பிட்டு வலம் வந்தது.

இந்த நிலையில், தற்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக தளத்தில் தான் சுவைத்து உண்ட பிட்டு தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இதில் பிட்டு உணவை எனக்கு பரிந்துரைத்தமைக்கு நன்றி என்றும், இலங்கையில் சிறந்த உணவொன்றை நான் சுவைத்திருக்கின்றேன் எனவும், இதில் சிறிது தேங்காய்ப் பால் சேர்த்து உண்பது அதி சுவையாக இருந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவிற்கு பல இலங்கையர்கள் பிட்டின் சுவை தொடர்பில் கருத்து தெரிவித்து வருவதுடன், பிட்டினை பல்வேறு வழிகளில் எவ்வாறு சுவைக்கலாம், தேங்காய்ப்பாலுடன், சர்க்கரையுடன் என பல்வேறு கறி வகைகளுடன் சுவைத்துப் பாருங்கள் என தூதுவருக்கு பரிந்துரைத்து வருகின்றனர்.


Previous Post Next Post