யாழில் பட்டப் பகலில் வீடு புகுந்து திருடிய இருவரை மடக்கிப் பிடித்த ஊர் மக்கள் நையப்புடைப்பு! (படங்கள்)

உடுவில் தொம்பை வீதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் கதவு கழற்றி உள்ளே புகுந்து மோட்டார் திருடி தப்பித்த இருவர் ஊர் மக்களால் மடக்கப்பிடிக்கப்பட்டனர்.

ஓட்டுமடத்தைச் சேர்ந்த இருவரே இன்று நண்பகல் பட்டப்பகலில் வீடு புகுந்து மோட்டார் திருடி தப்பித்த வேளை சிக்கிக்கொண்டனர்.

வீட்டின் கதவு கழற்றிவிட்டு உள்ளே புகுந்த இருவரும் மோட்டார் நீர்ப்பம்பியைத் திருடிக் கொண்டு தப்பித்த வேளை வீட்டிலிருந்த பெண் கண்டுள்ளார். அவர் குரல் எழுப்பியதால் அயலவர்கள் கூடி திருடர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து நையப்புடைத்தனர்.

சுன்னாகம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Previous Post Next Post