யாழில் ஒரே நாளில் அதிகூடிய கொரோனா மரணங்கள்!


யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 9 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் உயிரிழந்தோரின் அதிக எண்ணிக்கை இதுவாகும்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரும் கொடிகாமத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவரும் என 9 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவரும் கொடிகாமத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரும் வவுனியாவைச் சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவரும் கொக்குவிலையைச் சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவரும் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும் நவாலியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.

இதவேளை, கொடிகாமத்தைச் சேர்ந்த 80 மற்றும் 70 வயதுடைய ஆண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 209ஆக உயர்வடைந்துள்ளது.
Previous Post Next Post