முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்!


முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர (வயது-65) காலமானார்.

கோவிட்- 19 வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று முற்பகல் காலமானார்.

இந்த மாத தொடக்கத்தில் சமரவீர வைரஸால் பாதிக்கப்பட்டார். அவருக்கு கோவிட்- 19 தடுப்பூசியின் இரண்டு அலகுகளும் போடப்பட்ட போதிலும், லங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) சிகிச்சை பெற்று வந்தார்.

மங்கள சமரவீரவுக்கு கோவிட்-19 நிமோனியா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது முன்னாள் ஊடக செயலாளர் அசிதா ராஜபக்ச ஓகஸ்ட் 16 திகதியன்று கீச்சகத்தில் பதிவிட்டிருந்தார்.

சமரவீர உயிரிழந்ததாக கடந்த வாரம் உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் வெளிவந்தபோது, அவர் உண்மையில் குணமடைந்துள்ளதாகவும், சிகிச்சை நன்றாக பதிலளிப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
Previous Post Next Post