யாழில் இரு சகோதரர்களால் குடும்பத் தலைவர் அடித்துக் கொலை!


காணிப் பிரச்சினை குடும்பத்தலைவர் ஒருவரின் கொலையில் முடிந்தது.

சகோதரர்கள் இருவர் இணைந்து குடும்பத்தலைவரை கம்பியால் தாக்கியதில் அவர் உயிரிழந்ததுள்ளார் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தன்கேணி கலைவாணி வீதியில் இன்று காலை 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் புள்ளி என்று அழைக்கப்படும் 45 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்துள்ளார்.

“வெளிநாட்டில் உள்ளவரின் வயல் காணியை சகோதரர்கள் இருவர் பராமரித்து வருகின்றனர். இன்றைய தினம் அந்தக் காணியில் மற்றொருவர் உள்ளதாக அறிந்த சகோதரர்கள் இருவரும் அங்கு சென்று அவருடன் முரண்பட்டதுடன் கம்பியால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளானவர் சம்பவ இடத்திலேயே சரிந்து உயிரிழந்துள்ளார்” என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து தாக்குதல் நடத்திய சகோதரர்கள் இருவரும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post