கள்ள மண் அகழ்வில் ஈடுபட்டவர்களைத் துரத்திய மக்கள்! தப்புவதற்கு ஆற்றில் குதித்த இளைஞன் உயிரிழப்பு!! (வீடியோ)


மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்திலுள்ள பெண்டுகள்சேனை ஆற்றில் குதித்ததில் இளைஞன் ஒருவர்உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று(13) இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்டுகள்சேன, பூலாக்காடு வயல் பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை  வயல் பகுதியில் நின்றோர் துரத்தியபோது குறித்த இளைஞன் ஓடிச் சென்று அருகிலுள்ள ஆழமான ஆற்றில் குதித்துள்ளார்.

ஆற்றில் குதித்தவர் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவருகின்றது.

உயிரிழந்தவர் கிரான் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குலேந்திரன் இந்திரன் எனவும் தெரியவருகின்றது.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post