அமைச்சரவையில் மாற்றம்!


ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமைச்சரவையில் மாற்றம் செய்தார்.

சுகாதார அமைச்சு உள்பட சில அமைச்சுகளின் திணைக்களங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

கெஹெலிய ரம்புக்வெல்ல புதிய சுகாதார அமைச்சராகவும், முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி புதிய போக்குவரத்து அமைச்சராகவும் பதவியேற்றனர்.

புதிய அமைச்சரவை மாற்றத்தின் படி, தினேஷ் குணவர்தன புதிய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார்.

டலஸ் அஹலஹப்பெரும புதிய ஊடக மற்றும் தகவல் அமைச்சராகப் பதவியேற்றார். காமினி லோகுகே புதிய மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சராக பதவியேற்றார்.

மேலும், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், வளர்ச்சி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சராகவும் நாமல் ராஜபக்ச பதவியேற்றுள்ளார்.
Previous Post Next Post