சாட்டி சுற்றலா மையம் மறு அறிவித்தல் வரும் வரை பூட்டு! (படங்கள்)

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சாட்டி உல்லாச கடற்கரைச் சுற்றுலா மையம் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றுக் காரணமாகவே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த கடற்கரைப் பகுதிக்கு வருவதை மக்கள் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Previous Post Next Post