மருத்துவ அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடே நாடு மோசமாகப் பாதித்தமைக்குக் காரணம்!


6 பொறுப்புகளையும் தொற்றுநோயியல் பிரிவு உகந்த முறையில் நிர்வகிக்க தவறியமையே கோவிட்-19 தொற்றுநோயினால் நாடு மோசமாக பாதித்துள்ளது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சருக்கு எடுத்துள்ளது.

தொற்றுநோயியல் பிரிவின் பங்கு குறித்து சுகாதார அமைச்சருடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று (27) கலந்துரையாடியது.

அதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தொற்றுநோயியல் பிரிவுக்கு 6 முக்கிய பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

I. நோய் கண்காணிப்பு
II. கொத்தணி கட்டுப்பாடு
III தடுப்பூசி ஒருங்கிணைப்பு
IV. மருத்துவ முகாமைத்துவ ஒருங்கிணைப்பு
V. செயல்பாட்டு ஆராய்ச்சி
VI கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு

மேற்கண்ட 6 பொறுப்புகளையும் தொற்றுநோயியல் பிரிவு உகந்த முறையில் நிர்வகிக்க தவறியது தற்போதைய நோய் பரவலை மோசமாக பாதித்துள்ளது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சரிடம் சுட்டிக்காட்டியது.

தொற்றுநோயியல் பிரிவின் இரண்டு தலைமை மருத்துவர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிபாளர் நாயகம் (பொது சுகாதாரம் I) ஆகியோரின் தன்னிச்சையால் தொற்றுநோய் கட்டுப்பாட்டு செயல்முறை தற்போது தடைபட்டுள்ளது.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் (பொது சுகாதாரம் 1) தலைமையில் தொற்றுநோயியல் வல்லுநர்கள் அடங்கிய பிரிவிடம் ஆறு முக்கிய பொறுப்புகளும் வழங்கப்படவேண்டும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் பிரிவு இயக்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சரிடம் வலியுறுத்தியது.

இது மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முடிவுகளின் அடிப்படையில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், ஐந்தாவது கோவிட்-19 அலையைத் தடுக்கவும் உதவும் என்று சங்கம் சுகாதார அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.

மேலும், கோவிட்-19 நோயப் பரவலைக் கட்டுப்படுத்தம் ஆரோக்கியமற்ற துறைகள் சில நேரங்களில் பொதுமக்களுக்கு சுகாதார அறிவுரை வழங்கும்போது தவறான தகவல்களையும் அறிவுரைகளையும் வழங்குவதை காணலாம்.

எனவே, சுகாதார அமைச்சு தொற்றுநோய் குறித்த உண்மையான தகவல்களை வழங்க அதிகாரம் அளிக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் கோவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்துதல் தங்கள் ஆதரவை பெற முடியும்.

மேலும், கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சரியான தொழில்நுட்ப முடிவுகளை எடுக்க தேவையான ஆதரவை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர்ந்து சுகாதார அமைச்சுக்கு வழங்கும் என்று சுகாதார அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது.
Previous Post Next Post