
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் அநாவசியமாக பலர் நடமாடி திரிந்த நிலையில் ,
யாழ்.பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு திடீர் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது , அநாவசியமாக வீதியில் நடமாடியோர்
பலரை மறித்து சோதனைக்கு உட்படுத்தியதுடன் அவர்களின் விபரங்களை பதிந்த பின்னர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
அதேவேளை, அநாவசியமாக வீதியில் நடமாடியோர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



