தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு!


நாட்டில் ஓகஸ்ட் 20ஆம் திகதி தொடக்கம் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் செப்ரெம்பர் 13ஆம் திகதி தொடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு செப்ரெம்பர் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் கூடிய கோவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டம் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
Previous Post Next Post