02 ஆம் இணைப்பு: தொண்டமானாற்று நீரேரியில் மிதக்கும் ஆணின் சடலம்! (படங்கள்)

இரண்டாம் இணைப்பு:
 
தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்ட முதியவரின் சடலத்தை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை இத்தியடியைச் சேர்ந்த கந்தையா தேவராசா (வயது- 76) என்ற முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினர்.

மல்லாகம் நீதிவான் சடலத்தை பார்வையிட்டதுடன்,சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

உயிரிழந்தவர் நேற்றைய தினத்திலிருந்து காணமற்போன நிலையில் இன்று காலை மீன் பிடிக்க சென்றவர்களால் சடலம் கண்டறியப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு: 

யாழ்ப்பாணம் வடமராட்சி - தொண்டமனாறு நன்னீரேரியில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டமனாறு நன்னீரேரி பகுதியில் ஆணொருவர் சடலமாக மிதந்து கொண்டிருப்பதை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து குறித்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படடு வருவதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post